தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

26 Mar 2026, 2:46 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைப்பிடிப்பு

இராமநாதபுரம், மார்ச் 26 - இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சி. ஸ்ரீனிவாசன், ஆர். ஜெபஸ்தியன், ஏ. சூசை வியாகுலம், ஏ. ஆபிரகாம், கே. குமரையா கருப்பையா, எம். ராமர், வி. வீரணன் ஆகிய 7 மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று, இரண்டு விசைப் படகுகளில் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 பேரையும் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், நாட்டு மீன்வளத் துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணக்குத் தேர்வை எழுதாத 12 ஆயிரம் மாணவர்கள்!

சென்னை, மார்ச் 26 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை (மார்ச் 25) கணக்குப் பாடத் தேர்வு நடைபெற்ற நிலையில், 12 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மார்ச் 11 அன்று தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தேர்வில் இதுவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கணக்குப் பாடத் தேர்வை எழுத, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 569 மாணவர்கள் பதிவு செய்திருந்த னர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேரும் தனித் தேர்வர்கள் 17 ஆயிரத்து 763 பேரும் அடங்குவர். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற கணக்குப் பாடத்தேர்வில் மாணவர்கள் 11 ஆயிரத்து 284 பேரும், தனித் தேர்வர்கள் 1,524 பேரும் கலந்து கொள்ளவில்லை. அடுத்ததாக அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைகிறது. பிளஸ் 2 தேர்வுகள் நிறைவடைந்தன பிளஸ் 2 தேர்வுகள் வியாழக் கிழமையுடன் (மார்ச் 26) நிறைவடைந் தன. இறுதியாக தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் நெறி யியல், கணினி அறிவியல், உயிரி வேதி யியல், சிறப்புத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின்பொறியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு கள் நடைபெற்றன. பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளும் இன்றோடு (மார்ச் 27) நிறைவுறுகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.