தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட 11 ஆவது மாநாடு
24 Jan 2026, 3:38 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட 11 ஆவது மாநாடு

கரூர், ஜன.24-

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட 11ஆவது மாநாடு கரூரில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முனைவர் சொ. ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் என். சாகுல்ஹமீது வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் டி. திருநாவுக்கரசு அறிவியலை அறிவோம், அறிவியலால் இணைவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாட்ஷா வேலையறிக்கையை முன் வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் எம். மஹபுனிஷா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட துணைத் தலைவர் சி. கண்ணன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் தமிழரசி நன்றி கூறினார்.

மாவட்டத் தலைவராக வி.எஸ். பாஸ்கரன், மாவட்டச் செயலாளராக கெ. சக்திவேல், மாவட்டப் பொருளாளராக ஐ. ஜான்பாட்ஷா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில், கரூரில் விரிவடைந்த அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும். கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.