118 டன் மானிய விலை யூரியா பறிமுதல்: பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது
6 Jul 2026, 10:12 pm
<p><strong>118 டன் மானிய விலை யூரியா பறிமுதல்: பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது</strong></p><p>கோவை, ஜூலை 6- கோவை அருகே விவசாயிக ளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்து, பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற வழக்கில் 118 டன் யூரியா மற்றும் 3 லாரிகளை குடிமைப்பொ ருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் தம்மணம்பாறை பகுதியில் உள்ள ‘டெர்ரா பாலிமர்’ என்ற நிறு வனத்தில் மானிய விலை யூரியா கடந்த ஜூலை 4 ஆம் தேதியன்று மொத்தம் 45 கிலோ எடை கொண்ட 2,637 மூட்டைகளில், சுமார் 118.60 டன் யூரியா சட்டவிரோதமாக பதுக்கப் பட்டிருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சத்தியமங்கலம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய பகு திகளில் இருந்து இந்த மானிய விலை யூரியாவை கள்ளச்சந்தையில் வாங்கியுள்ளனர். இந்த யூரி யாவைப் பயன்படுத்தி ரெசின் எனப்படும் ஒட்டும் திரவத்தை தயா ரித்து, கேரளம் மாநிலத்தில் உள்ள பிளைவுட் தயாரிப்பு நிறுவனங்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்று சட்ட விரோத லாபம் சம்பாதிக்க திட்ட மிட்டிருந்தது அம்பலமானது. இதுகுறித்து பொள்ளாச்சி குடி மைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசில் புகார் அளிக்கப்பட் டது. போலீசார் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் உரக்கட் டுப்பாட்டு ஆணை ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார ணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளின் ஓட்டு நர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரமையா (35) மற்றும் சேலத்தைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள் ளனர். மேலும், இந்த கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான கேரளாவைச் சேர்ந்த ஆசிப் கே அலி, நிலத்தின் உரிமையாளர் கே.எம்.பாலகி ருஷ்ணன், லாரி உரிமையாளர் மகிபா லன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, லட்சுமண சண்மு கம் ஆகிய 5 பேர் தலைமறைவாகி யுள்ளனர். தலைமறைவான நபர் களை பிடிக்க பொள்ளாச்சி குடி மைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.</p>
