ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்
27 May 2026, 8:16 pm

ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்

குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.

ரகசியத் தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல்படை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு சரக்குக் கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அந்த மூட்டைகளில் 115 கிலோ எடையில் கொக்கைன் போதைப் பொ ருள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலையும் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 115 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆளும் குஜராத்தில் குறிப்பாக அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாஜக ஆளும் மாநிலம் போதைப்பொருட்களுக்கு நுழைவாயிலாக மாறிவிட்டது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.