தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

4 ஆண்டுகளில் 111 எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சி தாவல் பாஜக முதலிடம் :ஏடிஆர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

26 Sept 2026, 11:37 pm
4 ஆண்டுகளில் 111 எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சி தாவல் பாஜக முதலிடம் :ஏடிஆர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

4 ஆண்டுகளில் 111 எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சி தாவல் பாஜக முதலிடம் :ஏடிஆர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுதில்லிகடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரை மொத்தம் 111எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சிதாவியுள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல்கண்காணிப்பகம் (என்இடபிள்யூ) ஆகியஅமைப்புகள் அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுதொடர்பான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”தனிநபர்கள் கட்சி தாவல் மற்றும் கட்சிகள் இணைப்பு ஆகியவை இதில் கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி, 2022ஆம் ஆண்டு முதல் 78 எம்எல்ஏக்கள், 26 மக்களவை எம்.பி.க்கள், 7 மாநிலங்களவைஎம்.பி.க்கள் என மொத்தம் 111 மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவியுள்ளனர்.”

அதிகபட்சமாக, நாகாலாந்து மாநிலத்தில் 32 எம்எல்ஏக்கள் கட்சி தாவினர். அவர்களில் 25 பேர், ஆளும் தேசிய ஜனநாயக முற்

போக்குக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள். 32 பேரும் நாகா மக்கள் முன்னணியில் (பாஜக கூட்டணிக் கட்சி) இணைந்தனர்.அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மக்களவை எம்.பி.க்களாக இருந்த 20 பேர் அதிலிருந்து விலகி, இந்திய தேசிய குடிமக்கள்கட்சியில் இணைந்தனர். இந்தக் கட்சித்தாவல் விவகாரம் மக்களவைச் சபாநாயகரின் விசாரணையில் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதிசார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். கோவாமாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6மாநிலங்களவை எம்.பி.க்களும், 2 எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர்ந்தனர். தில்லியில் ஒரு ஆம் ஆத்மி மாநிலங்களவஎம்.பி.யும் பாஜகவில் சேர்ந்தார்.

கட்சி வாரியாகப் பார்த்தால், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியிலிருந்து அதிக அளவாக 25 எம்எல்ஏக்கள் வெளியேறியுள்ளனர். திரிணாமுல் காங்கிரசிலிருந்து 20 பேரும், காங்கிரசிலிருந்து 19 பேரும், ஆம் ஆத்மியிலிருந்து 9 பேரும் (7 மாநிலங்களவை எம்.பி. + 2 எம்எல்ஏ), சிவசேனாவிலிருந்து (உத்தவ்) 6 பேரும், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 5 பேரும் வெளியேறியுள்ளனர்.

கட்சி தாவியவர்களில் அதிக அளவாக நாகா மக்கள் முன்னணியில் 32 பேரும், பாஜகவில் 29 பேரும் இணைந்துள்ளனர். ஆட்சி மாற்றம் காரணமாகவே இந்தக் கட்சித் தாவல்கள் நடந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, “தகுதிநீக்கமனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தைச் சபாநாயகருக்குப் பதிலாகக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மாற்ற வேண்டும்” என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.