9 காலிப்பணியிடங்களுக்கு 1100 பேர் போட்டி
29 Nov 2025, 4:58 pm
<p><strong>9 காலிப்பணியிடங்களுக்கு 1100 பேர் போட்டி</strong></p>
<p>ஈரோடு, நவ.29- ஈரோடு வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, 1104 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 772 பேர் எழுத்துத்தேர்வினை எழுதினர். ஈரோடு மாவட்ட வருவாய் அலகில் ஈரோடு வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, வேளாளர் மெட்ரிக் மக ளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் வேளா ளர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி யில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் சனி யன்று நடைபெற்றது. காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப் பட்டு, ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்க ளுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற் றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்ப ளிக்கப்பட்ட விண்ணதாரர்களுக்கும் சனி யன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது. 1,104 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத அனு மதிக்கப்பட்டிருந்த நிலையில், 772 விண்ணப் பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 332 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வர வில்லை. முன்னதாக, தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன், மண்டல துணை வட் டாட்சியர் விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட னர்.</p>
