தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் 11 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - டிரம்ப்

20 Feb 2026, 2:39 pm
இந்தியா-பாகிஸ்தான் மோதல் 11 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - டிரம்ப்
<p><strong>இந்தியா-பாகிஸ்தான் மோதல் 11 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - டிரம்ப்</strong></p> <p>வாஷிங்டன்,பிப்.20- இந்தியா- பாகிஸ்தான் மோத லின் போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாகவும் நான் வரி விதிப்பேன் என மிரட்டியதால் போர் நிறுத்தப்பட்டது எனவும் காசா அமைதி வாரியக் கூட்டத்தில் டிரம்ப் கூறியுள்ளார். ஐ.நா அவையின் முக்கியத்து வத்தை குறைத்து, அதை முடக்கும் வகையில் &lsquo;காசா அமைதி வாரி யத்தை&rsquo; டிரம்ப் உருவாக்கியுள்ளார். இந்த வாரியத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. &nbsp;ஜனவரி 22 அன்று டாவோஸில் நடைபெற்ற இந்த வாரியத்தின் அறிமுக விழாவில் இந்தியா பங்கேற்க வில்லை. எனினும் இவ்வமைப்பில் இந்தியா உறுப்பினராக இணையுமா இணையாதா என வெளியுறவுத்துறை துவக்கத்தில் &nbsp;தெளிவுபடுத்தாமல் இருந்தது. கடந்த வாரம் வரை இந்த அமைப்பில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக மட்டுமே இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. &nbsp; இந்தச் சூழலில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடத்த இவ்வ மைப்பின் முதல் கூட்டத்தில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றுள்ளது. &nbsp;இது &nbsp;இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைப்பற்றிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. &nbsp; இந்தக் கூட்டத்தில் பேசிய போது தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை நான் தான் தடுத்து நிறுத்தனேன் என டிரம்ப் &nbsp;மீண்டும் &nbsp;கூறியுள்ளார். அதாவது இந்தி யப் &nbsp;பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரத மர் ஷெரீப் ஆகியோரைத் தான் நேரடி யாகத் தொடர்பு கொண்டு பேசியதாக வும், &ldquo;இரு நாடுகளின் மீதும் 200 சத வீத வரி விதிப்பேன், உங்களுடனான &nbsp;வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவேன் என எச்சரித்தேன். பணம் என்று வரும்போது எல்லாம் சரியாகிவிடும்&rdquo; என்றும், அதன் பின்னரே மோதல் முடிவுக்கு வந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும் அந்த மோதலில் சுமார் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்னால் தான் நிறுத்தப்பட்டது. நான் இரு நாடுகளையும் வர்த்தகம் தொடர்பாக மிரட்டினேன் என டிரம்ப் பலமுறை &nbsp;கூறிவிட்டார். &nbsp;ஆனால் ஒரு முறை கூட அந்த கூற்று தவறு என பிரதமர் மோடியோ இந்திய வெளியுறவுத்துறையோ வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.