தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பத்தூர் அருகே கோர விபத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி

30 Nov 2025, 3:38 pm
திருப்பத்தூர் அருகே கோர விபத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர்  மோதியதில் 11 பேர் பலி
<p><strong>திருப்பத்தூர் அருகே கோர விபத்து&nbsp;&nbsp;அரசு பேருந்துகள் நேருக்கு நேர் &nbsp;மோதியதில் 11 பேர் பலி</strong></p> <p>20க்கும் மேற்பட்டோர் படுகாயம் சிவகங்கை, நவ.30- சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் அருகே ஞாயிறன்று மாலை நேர்ந்த கோரமான சாலை விபத்தில் &nbsp;11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்துள்ளனர். திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் விவேகானந்தா பாலி டெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத் திலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், காரைக்குடி யிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் ஞாயிறன்று மாலை 5 மணியளவில் எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் பேருந்து கள் முற்றிலும் சேதமடைந்தன. 11 பேர் சம்பவ இடத்தில் மற்றும் மருத்துவ மனையில் பலியாகினர். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் படுகாய மடைந்த 20க்கும் மேற்பட்ட பயணி களை பேருந்துகளின் இடுபாடுகளில் இருந்து மீட்டு காரைக்குடி, திருப்பத் தூர் மற்றும் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பத்தூர் சரக காவல்துறை யினர் விரைந்து சென்று மீட்பு &nbsp;நடவடிக்கைகளை துரிதப்படுத்தி னர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர விட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.