தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

4 Mar 2026, 5:01 pm
வாய்ப்பு வாசல்

SBI-யில்  116  காலிப்  பணியிடங்கள்

பாரத ஸ்டேட் (SBI) வங்கியில் சிறப்பு அதிகாரிகள்(Specialist Officer (SO)) பிரிவில் மொத்தம் 116 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி –B.E./B.Tech (Computer Science / IT / Electronics / Software Engineering) அல்லது M.E./M.Tech / M.C.A போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு – குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை. அரசு விதிப்படி எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயதில் தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை – நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் இது பற்றிய முழு விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் – பொது/ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.750/- செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை   -  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://sbi.bank.in/web/careers/current-openingsஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி  மார்ச் 15, 2026 ஆகும்.

இந்திய ராணுவத்தில் அதிகாரி பணிகள் - 70

இந்திய ராணுவத்தில் NCC  பயிற்சி பெற்றவர்களுக்கு அதிகாரி பணிக்கான 70 காலி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பம் தற்போது வெளி யாகியுள்ளது. கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  மேலும்  NCC ‘B’ சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். NCC- யில் 2 வரு டம் பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இளநிலை பட்டம் பெற்றிருந்தால் போதும். NCC சான்றிதழ் தேவை இல்லை.  வயது வரம்பு – ஜூலை 1 , 2026  தேதியின்படி வயதுவரம்பு குறைந்த பட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  தேர்வு முறை – விண்ணப்பங்கள் சுருக்கப் பட்டியல், SSB நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ  பரிசோதனை மற்றும் இறுதி தர வரிசை பட்டியல் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை -  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல்  விபரங்கள் அறிவிக்கையில் முழுமை யாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.joinindianarmy.nic.inஎன்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி   மார்ச் 16, 2026 ஆகும்.

AIIMS-இல் 2551 செவிலியர்(Nursing) பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல் படும் All India Institute of Medical Sciences (AIIMS) மற்றும் இணைந்த அரசு மருத்துவ நிறுவனங் களில் 2 ஆயிரத்து 551 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – B.Sc. நர்சிங் / மகப்பேறு,  Diploma in General Nursing & Midwifery (GNM) படிப்பு முடித்திருக்க வேண்டும்.  வயது வரம்பு – குறைந்தபட்சம் 18  வயது முதல் அதிகபட்சம் 30 வயது  வரை என்று நிர்ணயிக்கப்பட்டிருக் கிறது. எஸ்.சி./எஸ்.டி – 5 ஆண்டுகள், ஓ.பி.சி – 3 ஆண்டுகள், மாற்றுத் திற னாளிகளுக்கு அரசு விதிப்படி வயதில் தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை – Computer Based Test (CBT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்  மருத்துவ பரிசோதனை அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொது/ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.3,000/- செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க லாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணு வத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை   -  இந்தப் பணி யிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற் கான விண்ணப்பம், விரிவான பாடத் திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.  முழுமையான அறிவிக்கையைப் பெற www.aiimsexams.ac.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 16, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.