ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகள்!
12 Nov 2025, 3:20 pm
<p><strong>ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகள்! </strong></p>
<p>தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்ப லில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கை யாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுக வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையி லான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறை. சீனாவின் கின்சோவ் துறைமுகத்தில் இருந்து எம்.வி. ஜி.எச்.டி. மரினாஸ் கப்பல் மூலம் இந்த இறக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 22 அன்று 101 இறக்கை கள் கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டன என்ற முந்தைய சாத னையை முறியடிக்கும் வகையில், 103 இறக்கைகள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக கையாளப்பட்டுள்ளன.</p>
