தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திறனாய்வுப் போட்டி 32 மையங்களில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

7 Dec 2025, 3:52 pm
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திறனாய்வுப் போட்டி 32 மையங்களில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
<p><strong>புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திறனாய்வுப் போட்டி 32 மையங்களில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு</strong></p> <p>திருப்பூர், டிச.7- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு, ஞாயிறன்று 32 மையங்களில் பள்ளி மாணவ, &nbsp;மாணவிகளுக்கான கலை, இலக் கிய திறனாய்வுப் போட்டிகள் நடை பெற்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் &nbsp;மேற்பட்ட மேற்பட்டோர் பங்கேற்ற னர். தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின் னல் புக் டிரஸ்ட் மற்றும் பொது நூல கத்துறை ஆகியவை இணைந்து நடத்தவுள்ள 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா, அடுத்தாண்டு ஜன.22 முதல் பிப்.1 ஆம் தேதி வரை காங்கேயம் சாலையில் அமைந்துள்ள வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இத் திருவிழாவை முன்னிட்டு, மாண வர்களுக்கான கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் ஞாயி றன்று நடைபெற்றன. வகுப்பு வாரியான போட்டிகள்: 1 முதல் 5 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு, ஓவியப் போட்டி மட் டும் நடைபெற்றது. &lsquo;எனக்குப் பிடித்த விலங்கு&rsquo;, &lsquo;பூந்தோட்டம்&rsquo;, &lsquo;தேசத் தலைவர்&rsquo;, &lsquo;திருவிழா&rsquo;, &lsquo;இன்பச் சுற்றுலா&rsquo; ஆகிய தலைப்பு களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந் தெடுத்து மாணவர்கள் ஓவியம் வரைந்தனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு &nbsp;மாணவர்களுக்கான ஓவியப் போட்டிக்கு &lsquo;சாலை விதிகள்&rsquo;, &lsquo;எனது குடும்பம்&rsquo;, &lsquo;ஓடியாடி விளை யாடு&rsquo;, &lsquo;விண்வெளி என்னும் அதிச யம்&rsquo;, &lsquo;நூலகமே என் வீடு&rsquo; ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டிக்கு &lsquo;சாதிக்கும் பெண்கள்&rsquo;, &lsquo;கல்வியே எதிர் காலம்&rsquo;, &lsquo;போரில்லா உலகம்&rsquo;, &nbsp;&lsquo;கைபேசி: வரமா? சாபமா?&rsquo;, &lsquo;எனக் குப் பிடித்த புத்தகம்&rsquo; ஆகிய &nbsp;தலைப்புகள் வழங்கப்பட்டிருந் தன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கான ஓவியப்போட்டிக்கு &lsquo;உழவே உயர்வு&rsquo;, &lsquo;மாசில்லா உல கம்&rsquo;, &lsquo;கனவு 2050&rsquo;, &lsquo;டிஜிட்டல் உல கம்&rsquo;, &lsquo;சிறகடிக்கும் பறவைகள்&rsquo; ஆகிய தலைப்புகள் கொடுக்கப் பட்டன. கட்டுரைப் போட்டிக்கு &lsquo;செம்மொழியான தமிழ் மொழி யாம்!&rsquo;, &lsquo;நீரின்றி அமையாது &nbsp;உலகு&rsquo;, &lsquo;உணவும், உடல் நலமும்&rsquo;, &nbsp;&lsquo;கையெட்டும் தூரத்தில் இலக்கு&rsquo;, &nbsp;&lsquo;உலகை ஆளும் ஏ.ஐ. தொழில் நுட்பம்&rsquo; ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டன. போட்டியாளர்க ளுக்கு தேவையான எழுதுதாள்க ளும், வரைவதற்கான சீட்டுகளும் வழங்கப்பட்டன. போட்டி நடைபெற்ற மையங்கள்: திருப்பூர் நகரின் ஜெய்பாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, என்.ஆர்.கே புரம் &nbsp;மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நொய்யல் வீதி அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி, வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, இடுவம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பூலுவபட்டி மாநகராட்சி &nbsp;துவக்கப்பள்ளி, 15 வேலம்பாளை யம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மங்கலம் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி, நல்லூர் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி, பெரு மாநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கே.செட்டிபாளை யம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாண்டியன் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, ரங்கநாத புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மன்னரை மாநகராட்சி நடு நிலைப்பள்ளி ஆகிய 18 மையங் களில் போட்டிகள் நடந்தன. மேலும், அவிநாசி, பல்லடம், ஊத் துக்குளி, குன்னத்தூர், பொங்க லூர், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தாராபுரம், குண்ட டம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் ஆகிய புறநகர் பகுதிகளிலுள்ள 14 பள்ளிகளிலும் போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளை வெவ்வேறு இடங்களில் துணை மேயர், ஒன்றிய &nbsp;கவுன்சிலர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், முன்னாள் ஊராட்சித் தலை வர்கள், பின்னல் புக் டிரஸ்ட் நிர் வாகிகள், கல்வித்துறை அலுவ லர்கள் உள்ளிட்டோர் துவக்கி வைத் தனர். ஆயிரக்கணக்கான பெற் றோர்களும், 10 ஆயிரத்து 479 மாண வர்களும் பங்கேற்றனர். போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு, புத்தகத் திருவிழா வளாகத் தில் ஜன.27 ஆம் தேதி மாலை பரிசு கள் வழங்கப்படும். கூடுதலாக, திரு விழாவுக்கு வரும் மாணவர்களில் தினமும் குலுக்கள் முறையில் 10 &nbsp;பேர் தேர்வு செய்யப்பட்டு, ஒவ் வொருவருக்கும் ரூ.500 மதிப்புள்ள &nbsp;புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் &nbsp;என திருப்பூர் புத்தகத் திருவிழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.