10,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 9 பேர் கைது
12 hours before

10,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 9 பேர் கைது

அம்பத்தூர், செப். 16-அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பகுதியில் உள்ள கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் கிடங்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 200 மூட்டைகளில் தலா 50 கிலோ எடை கொண்ட 10,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24), ராகுல் (18), ரன்வீர் குமார் (25), சோனு குமார் (24), லட்சுமணன் குமார் (24), விகாஷ் குமார் (21), பங்கேஷ்குமார் (20), திப்புக்குமார் (32) மற்றும் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஆசிப் (24) ஆகிய 9 வரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் ரேஷன் கடையில் இருந்து அரிசியை, கடை ஊழியர்கள் உதவியுடன் விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு சரக்கு வாகனம் மூலம் கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரையும், 10,000 கிலோ ரேஷன் அரிசி அம்பத்தூரில் உள்ள குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.