தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூடலூரில் இருளில் வாழும் 10 ஆயிரம் குடும்பங்கள் பட்டா, மின் இணைப்பு கேட்டு சிபிஎம் போராட்டம்!

15 Dec 2025, 2:48 pm
கூடலூரில் இருளில் வாழும் 10 ஆயிரம் குடும்பங்கள் பட்டா, மின் இணைப்பு கேட்டு சிபிஎம் போராட்டம்!

கூடலூரில் இருளில் வாழும் 10 ஆயிரம் குடும்பங்கள் பட்டா, மின் இணைப்பு கேட்டு சிபிஎம் போராட்டம்!

உதகை, டிச. 15 – கூடலூர் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கட்கிழமை யன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், கட்சியின் மாநிலச்  செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார். கூடலூரில், 10,052 குடும்பங்கள் கைவசம் வைத்து விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்கிட வேண்டும்; பெரும் முத லாளிகள் கையகப்படுத்தியுள்ள அர சுக்கு சொந்தமான நிலத்தை அரசு கைப்பற்றி, நிலமில்லாத ஏழை - எளிய மக்களுக்கு பிரித்து வழங்கிட வேண்டும்; ​குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா இல்லை என்ற காரணத்திற்  காக மின் இணைப்பு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவ தால், கூடலூரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும்  இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற னர். இவர்களின் வீடுகளுக்கு மின்  இணைப்பு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மின் இணைப்பிற் கான தடையில்லா சான்றிதழை, லஞ்ச  ஊழல் இல்லாமல், பாரபட்சமில்லாமல் அதிகாரிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உதகையில், நீலகிரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் தலைமை ஏற்றார். மாநிலச்செயலாளர் பெ.சண் முகம், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துக! :  பெ. சண்முகம்

உதகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக கூடலூரில் பல தலைமுறைகளாக மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதனை அமல்படுத்தாமல் உள்ளது. மலைப்பகுதி மட்டுமல்லாமல் சமவெளிப் பகுதிகளிலும் நீர்நிலைப் புறம்போக்கு, பட்டா இல்லாமல் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு தர முடியாது என அரசு கூறி வருகிறது. மின் இணைப்பு வழங்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. குழந்தைகள் படிக்க வேண்டும். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. அதேபோல வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ளவர்களுக்கு உடனடியாக சிறப்பு முகாம் போட்டு ஒரே நாளில் இழப்பீடு வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006-இன் படி நீலகிரி மாவட்டத்தில் வனத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முன் வரவேண்டும். இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  ஒன்றிய அரசு, நூறு நாள் வேலையுறுதிச் சட்டத்தை மாற்றியுள்ளது. இதே போல வன உரிமை சட்டமும் மாற்றப்பட்டால், பழங்குடியினர் மற்றும் வனத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். வன உரிமைச் சட்டத்தின் வாய்ப்பை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அடிப்படை உரிமைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். பாஜக அரசு மக்களுக்கு விரோதமான சட்டங்களை அமல்படுத்தியும், மக்களுக்கு சாதகமான சட்டங்களைத் திருத்துவது என மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெதிராக வலுவான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.  முன்னதாக நீலகிரி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்த மனுவினை நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.