தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

1,000 உழவர் நல சேவை மையங்கள் இடைக்கால வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

17 Feb 2026, 3:36 pm
1,000 உழவர் நல சேவை மையங்கள்  இடைக்கால வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு
<p><strong>1 000 உழவர் நல சேவை மையங்கள் &nbsp;இடைக்கால வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு</strong></p> <p>&nbsp;சென்னை, பிப். 17 - &nbsp;தமிழக சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். &nbsp;அப்போது, விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாட்டில் அரசு உறுதியான அர்ப்ப ணிப்பைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். &nbsp;தொடர்ந்து அவர் கூறியதாவது: இளைஞர்களுக்கு வாய்ப்பு, &nbsp;விவசாயிகளுக்கு நேரடி சேவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அதிமுக்கிய திட்டமான 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம், வேளாண் துறையில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை களில் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற இளைஞர்கள், தாங்களாகவே சேவை மையங்களை நிறுவிக்கொள்ள அரசு 30 சதவிகித மானியம் வழங்குகிறது. &nbsp;இதன்படி, ஒவ்வொரு பய னாளிக்கும் 3 லட்சம் ரூபாய் முதல் 6 &nbsp;லட்சம் ரூபாய் வரை நேரடி மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருபுறம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும், மறுபுறம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் ஆலோசனை மற்றும் சேவைகளும் வீட்டுவாசலிலேயே கிடைக்கும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும் 32 பொருட்களுக்கு புவிசார் குறியீடு &nbsp;கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 41 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 விளை பொருட்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள 32 விளை பொருட்களுக்கும் குறி யீடு பெறும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. மதிப்புக்கூட்டு பொருட்கள் திட்டத்திற்கு மானியம் தக்காளி, மா, பலா, மிளகாய், தேங்காய், சிறுதானியங்கள் போன்ற &nbsp;விளைபொருட்களை மதிப்புக்கூட்டி உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்ய, ரூ. 10 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை, அதாவது ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதோடு, 456 &nbsp;பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ. 4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மீது தனிக் கவனம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 70 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் &nbsp;இதுவரை 17,340 பேர் பயன்பெற்றுள்ள னர். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திற்கு ரூ. 19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 69,457 கோடி பயிர்க்கடன் ரூ. 44 கோடி செலவில் 134 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 12 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். இயற்கை வேளாண்மைக்கு &nbsp;ரூ. 142 கோடி ஒதுக்கீடு இயற்கை வேளாண்மை முன்னெடுப்புகளில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் வழியாக 900 மெட்ரிக் டன் நெல் வகைகள் சேகரிக்கப்பட்டு 70 ஆயிரம் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 58 ஆயிரம் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மண்ணுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சத்து 84 ஆயிரம் விவசாயி களுக்கு ரூ. 178 கோடி வழங்கப் பட்டுள்ளது. பயிர்ச் சேத நிவாரணமாக ரூ. 20,000 கோடி வழங்கப்பட்டு, 25.36 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், 83,641 விவசாயிகளுக்கு ரூ. 69,457 கோடி பயிர்க்கடனும், 16 லட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ரூ.8,938 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளக் காலங்களில் நெல் வீணாகாமல் இருக்க ரூ. 495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. கணவரை இழந்த பெண்களுக்கு வருவாய் உறுதிப்படுத்த, 100 சதவிகித மானியத்தில் 38,800 பயனாளிகளுக்கு ரூ. 75.63 கோடி செலவில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.