அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 1000 பேர் கைது
6 Jan 2026, 4:23 pm
<p><strong>அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 1000 பேர் கைது</strong></p>
<p>திருப்பூர், ஜன.6- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் களாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று கோபாவேச சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சம், உதவி யாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மே மாதம் விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப் பையும் முன் பருவ கல்வியின் முக்கி யத்துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பல்லடம் - திருப்பூர் சாலையில் 1000த்திற்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத் திற்கு கொண்டு சென்றனர். முன்னதாக, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் வாழ்த்திப் பேசி னார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலாளர் சித்ரா, மாவட்ட நிர்வாகி ராணி, சிஐடியு நிர்வாகிகள் கே.உண்ணிகிருஷ்ணன், பி.பாலன், ஒய்.அன்பு, ஆர்.சிவராமன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
