ராணிப்பேட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு
27 Mar 2026, 3:15 pm
<p><strong>100 சதவீத வாக்குப்பதிவு திருநர்கள் விழிப்புணர்வு</strong></p>
<p>விழுப்புரம், மார்ச் 27- விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குகளை வலியுறுத்தி திருநர்கள் கைகளில் மெஹந்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் முன்பு சமூகநலத்துறை சார்பில் நடைபெற்றது, திருநங்கைகள் கைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என மெஹந்தி மூலம் எழுதி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த துண்டு பிரசுரங்களை திருநர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கதிர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.</p>
