முந்தய பக்கம்

மலைவாழ் மக்கள் சங்கத்திலிருந்து 100 பேர் மார்க்சிஸ்ட் கட்சியின் இணைந்தனர்

9 Nov 2025, 4:12 pm
மலைவாழ் மக்கள் சங்கத்திலிருந்து  100 பேர் மார்க்சிஸ்ட் கட்சியின் இணைந்தனர்
<p><strong>மலைவாழ் மக்கள் சங்கத்திலிருந்து &nbsp;100 பேர் மார்க்சிஸ்ட் கட்சியின் இணைந்தனர்</strong></p> <p>திருவள்ளூர், நவ 9- திருவள்ளூர் மாவட்டத்தில் &nbsp;தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் &nbsp;மேலானூர், தொடுகாடு, நரசமங் களம், பிஞ்சிவாக்கம், சூரகாபுரம், ஏகாட்டூர், திருமேனிகுப்பம், குமரச் சேரி, மப்பேடு, வாசனாம்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து 38 பெண்கள் உள்ளிட்டு &nbsp;நூறு பேர் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியில் &nbsp;இணைந்த னர். இதற்கான உறுப்பினர் படி வத்தில் கையெழுத்திட்டு ஞாயிறன்று (நவ 9), சிபிஎம் கட்சியின் இணைந்த னர். திருவள்ளூர் &nbsp;மேல்நல்லாத்தூ ரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே மலைவாழ் சங்கத்திலி ருந்து 60 பேர் சிபிஎம் கட்சியின் இணைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையர சன் தலைமை தாங்கினார். தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கட்சியின் திட்டம், கொள்கை குறித்து பேசினர். இதில் வட்டக் குழு உறுப்பினர் சின்ன ராசு, கிளை செயலாளர்கள் ஜி.ஆறுமு கம், பி.அற்புதம், வழக்கறிஞர் சுதர்ச னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram