ஒரே நாளில் 100 மருத்துவ மாணவர்கள் ரத்ததானம்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>ஒரே நாளில் 100 மருத்துவ மாணவர்கள் ரத்ததானம்</strong></p>
<p>விருதுநகர், மார்ச் 26- விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் எம்.பி.பி.எஸ் மாணவர்களின் ரத்ததானக் கழகத்தின் சார்பில் தன் னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கல்லூரி முதல்வர் ஜெயசிங் துவக்கி வைத்தார். பிறருக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி தாமாக முன்வந்து 104 மாண வர்கள் உதிரதானம் செய்த னர். மேலும் இதில், நிலைய மருத்துவ அலுவலர், உதவி நிலைய மருத்துவ அலுவ லர், மருத்துவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
