முந்தய பக்கம்

கடலூரில் 4-வது நாளாக மறியல் மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது

13 Feb 2026, 5:58 pm
கடலூரில் 4-வது நாளாக மறியல்  மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது
<p><strong>கடலூரில் 4-வது நாளாக மறியல் &nbsp;மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது</strong></p> <p>கடலூர், பிப். 13- மாதாந்திர உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல் மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில்தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4-வது நாளாக கடலூர் சீமாட்டி சிக்னல் அருகில் மாவட்டத் துணைச் செயலாளர் வி. வசந்தி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஆர். ஆளவந்தார் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் இராம. நடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். ரவி, எம். சுந்தரவேல், ஜெயலட்சுமி, கே. பாவாடை, சாமி கோவிந்தராசு, சுந்தரி, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram