முந்தய பக்கம்

பணி வழங்காததை கண்டித்து, 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

6 Feb 2026, 5:17 pm
பணி வழங்காததை கண்டித்து, 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
<p><strong>பணி வழங்காததை கண்டித்து, 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்</strong></p> <p>ஈரோடு, பிப்.6- சீராக பணி வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் விண் ணப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி ஊராட்சி யில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வேலை வழங்க வில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலை யில், சீராக வேலை வழங்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள், வேலை அட்டையை கையில் ஏந்தி விண்ணப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை வியாழனன்று முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். முடிவில், அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில், போராட்டக்கா ரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram