முந்தய பக்கம்

கடலூரில் 100 உடல் தானம் படிவம் ஒப்படைப்பு

16 Dec 2025, 3:51 pm
கடலூரில்  100 உடல் தானம் படிவம் ஒப்படைப்பு
<p><strong>கடலூரில் &nbsp;100 உடல் தானம் படிவம் ஒப்படைப்பு</strong></p> <p>சிதம்பரம்,டிச.16 - சிதம்பரம் கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி நினைவாக 100 உடல் தானம் படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை தாங்கி னார். சிதம்பரம் நகர செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் 100 உடல் தானம் படிவத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, மருத்துவ கண் காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், துணை கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரிடம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன் ராமச்சந்திரன், திருஅரசு, தேன்மொழி, பிரகாஷ், வாஞ்சிநாதன், அமர்நாத், அண்ணாமலை நகர் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மருந்தக உரிமையாளர் நிலமங்கை இளவரசன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகர், புவன கிரி செயலாளர் காளி கோவிந்தராஜன், நகர மன்ற துணைத்தலைவர் முத்துக் குமரன், தண்டபாணி, சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram