தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

25 Dec 2025, 6:14 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் கைது சேலம், டிச.25- சேலம் மாநகர பகுதியில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.2 ஆயிரம்  லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தனது இறந்த தாய்க்கு இறப்பு சான்றிதழ் கேட்டு செவ்வாய்பேட்டை பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் என்பவரிடம் விண் ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் இறப்பு சான்றி தழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப் பட்டது. இந்நிலையில் பாலாஜி சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை பாலாஜி யிடம் கொடுத்து விஏஓ ராஜசேகரிடம் கொடுக்க  அறிவுறுத்தினர். இதனையடுத்து பாலாஜி அப்ப ணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ராஜசேகரனை கைது  செய்தனர்.

பள்ளி பேருந்துகளில் ஆய்வு மேட்டுப்பாளையம், டிச.25- மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிக ளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடு முறை விட்ட நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இயங் கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த முன்னூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங் கள் சிறுமுகை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்திற்கு புதனன்று கொண்டு வரப்பட்டது. பின்னர் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர் சத்தியகுமார், காவல்துறை ஆய்வாளர் சின்னகாம ணன், துணை வட்டாச்சியர் ரேவதி, தீயணைப்பு நிலைய அலுவலர் அணில்குமார் உள்ளிட்ட அதிகாரி கள் வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்த னர். பின்னர், செல்போன் பேசியபடி பள்ளி வாகனங் களை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங் களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியை நகர்த்து வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண் டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், இதனை மீறுவோரின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பத்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி சேலம், டிச.25- அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 10 ஆடு கள் பலியான நிலையில், பொதுமக்கள், துட்டம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு இறந்த ஆடுகளைக் கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே செங் கோடனூர் செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த 10 ஆடுகளை புதனன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று கடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்ப குதி பொதுமக்கள், துட்டம்பட்டி ஊராட்சி அலுவல கம் முன்பு இறந்த ஆடுகளை கொண்டு வந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். தாரமங்கலம் காவல் துறையினர், வருவாய்த்துறை, கால்நடை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை பிரேதப் பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளை கடித்த விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் செல்போன்கள் கண்டுபிடிப்பு சேலம், டிச.25- சேலம் மத்திய சிறையில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த இரண்டு செல்போன்கள் கண்டுபிடிக்கப் பட்டது. சேலம் ஏற்காடு சாலையில் உள்ள மத்திய சிறைக்குள் தொடர்ந்து கைதிகள் செல்போன் பயன்படுத்தவது குறித்து  குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் சேலம் மத்திய சிறை ஒன்பதாவது பிளாக் அருகில் உள்ள மரத்துக்கு அடியில் சந்தேகமாக இரண்டு கைதிகள் நடந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழனன்று சோதனை செய்து மரத்தின் கீழே 2 செல்போன்கள் மண்ணுக்குள்ளே புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சிறை அதிகாரிகள் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது என சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.