போக்குவரத்து விதி மீறல் எனக் கூறி மோசடி: குஜராத்தை சேர்ந்த 10 பேர் கைது
12 Jan 2026, 6:20 pm
<p><strong>போக்குவரத்து விதி மீறல் எனக் கூறி மோசடி: குஜராத்தை சேர்ந்த 10 பேர் கைது</strong></p>
<p>கோவை, ஜன.12- போக்குவரத்து விதியை மீறியதாக ரசீது அனுப்பி கோவையை சேர்ந்த முதியவரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (70). இவருக்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வாட்சப் மூலம் குறுஞ் செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் சாமு வேல் சந்திரபோஸ் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வந்தது. மேலும் அதனு டன் அபராதத்தை கட்ட செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை உண்மை என நம்பிய சாமுவேல் சந்திரபோஸ் அந்த செயலியை பதிவிறக்கம் செய் தார். சிறிது நேரத்தில் அவரது செல்ஃ போன் ஹேக் செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்கில் வைத்திருந்த ரூ.16.5 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். அப்போது வங்கிக் கணக்கி லிருந்து பணம் எடுக்கப்பட்ட சர்வர் குஜராத் மாநிலத்திலிருந்து இயக்கப் பட்டது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அழகுராஜா தலைமையி லான போலீசார் குஜராத் விரைந்தனர். அங்கு மேற்கொண்ட தீவிர விசாரணை அடிப்படையில் சூரத்தை சேர்ந்த பத்லியா ரஜ்னிபாய் (37), விஸ்வபாய் (36), ரடாடியா சவன் (34), கோஹில் விஜய் (37), ரத்தோர் ஜிதேந்திர சிங் (26), கிராசே மகேந்திர சிங் (22), சோவா டியா மிரல் (22), கபில் (36), சோவாடியா மீட் (25), பால் சந்தன் (34) ஆகிய 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர் களிடமிருந்து ரூ.3.5 லட்சம் ரொக்கம், 311 கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், 10 செல்போன்கள், ஒரு ஸ்வைப்பிங் மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. அத்துடன் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.6.39 லட்சத்தை பாதிக்கப்பட்ட சாமுவேல் சந்திர போஸ்க்கு பெற்றுக் கொடுக்க நீதிமன் றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கூறும் போது, கைதான 10 பேர் பலரிடம் மோசடி செய்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவார்கள், அந்த அபராத தொகையை செலுத்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண் டும் என அறிவுறுத்துவார்கள். அதனை நம்பி பதிவிறக்கம் செய்தால் உடனடி யாக அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விட்டு வாட்ஸ் அப் எண்ணை பிளாக் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இவ்வாறு மோசடியாக பெறப்படும் பணத்தை வெவ்வேறு பெயர்களில் போலியான வங்கிக் கணக்கை தயாரித்து அதனை எடுத்து செலவு செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோவைக்கு அழைத்து வந்த 10 பேரையும் சைபர் கிரைம் போலீ சார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.</p>
