தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Jan 2026, 3:04 pm

வாக்காளர் பட்டியல் திருத்தம் பெயர் சேர்ப்புக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்!

சென்னை, ஜன. 29 - தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரைச் சேர்ப்பதற்கு ஜனவரி 30 வரை தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணை யத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, உச்சநீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீக்கப்படவுள்ள வாக்காளர்களின் பெயர்களை கிராம பஞ்சாயத்து, தாலுகா மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், ஆட்சேபணை உள்ளவர்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நீக்கப்பட்டவர்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 17 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தற்போது வரை 16 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

இணையத் தயார் : ஓ.பி.எஸ்; சேர்க்க முடியாது : இபிஎஸ்!

தேனி, ஜன. 29 - அதிமுகவில் இணைவதற்கு நாங்கள் தயார்... எங்களை இணைப்பதற்கு டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா? என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், பெரியகுளம் பண்ணை வீட்டில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். “டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுக வெற்றிபெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத் தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதிலளித்துள்ளார். அதில், “ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். பொதுக்குழுவில் எடுத்த முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. எனவே, அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை!” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% ஒதுக்கீடு

சென்னை, ஜன. 29 - அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சத விகிதம் ஒதுக்கீடு வழங்க தகுந்த பதவிகளை அடை யாளம் கண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, சார்பு செய லாளர், பிரிவு அலு வலர் உள்ளிட்ட 13 பணி யிடங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பதவி கள் அடையாளம் காணப் பட்டு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

சென்னை, ஜன. 29 - கடந்த ஜனவரி 27 அன்று வெளியிடப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மென்பொருள் பிரச்சனை காரணமாக இந்த முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளதாகவும்; உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் தெரிவித்துள்ளது.