தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; உளவுத்துறையில் முக்கிய மாற்றங்கள்

14 May 2026, 9:40 pm
10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; உளவுத்துறையில் முக்கிய மாற்றங்கள்

10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; உளவுத்துறையில் முக்கிய மாற்றங்கள்

சென்னை, மே 14 - த.வெ.க. அரசு பொறுப்பேற்ற தைத் தொடர்ந்து காவல் துறையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக உளவுத்துறை மற்றும் முக்கிய விசாரணைப் பிரிவுகளில் பணியாற்றும் 10 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த பி. பாலநாகதேவி, சைபர் கிரைம் பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி. அளவில், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஜி. தர்மராஜன் சென்னை உளவுத்துறை பாதுகாப்பு டி.ஐ.ஜி.யாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த பகெர்லா செபாஸ் கல்யாண் உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு டி.ஐ.ஜி.யாகவும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த பி. சரவணன் சி.ஐ.டி. உளவுத்துறை டி.ஐ.ஜி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர். எஸ்.பி. அளவில் திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சென்னையில் உள்ள சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு, பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு பொறுப்பு

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்கிறது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாகவும் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றியவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆவார். உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த செந்தில்வேலன் தமிழ்நாடு போலீஸ் அகடமியின் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். பால் உற்பத்தி, ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஊனமாஞ்சேரி காவல் பயிற்சி பள்ளி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.