தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

10 Dec 2025, 4:08 pm
திருச்சி விரைவு செய்திகள்

டிச.13 தேசிய மக்கள் நீதிமன்றம்: பெரம்பலூர் மக்களுக்கு அழைப்பு சட்டப் பணிகள் ஆணைக்குழு தகவல்

பெரம்பலூர், டிச.9 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நடை பெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lok Adalat) நடைபெற உள்ளது. வழக்காடிகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட கால மாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்- வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர் பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதான மாக போகக் கூடிய வழக்குகள்) நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றுக்கு தீர்வு கண்டு சமரசமாக செல்ல  ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது. எனவே, பொது மக்கள் - வழக்காடிகள் 13.12.2025 அன்று  நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சட்டப்  பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

மதிய உணவு ஒவ்வாமை அரசுப் பள்ளி மாணவர்கள்  10 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை, டிச.10 -  கணக்கம்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர் களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கணக்கம் பட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம்  வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு  செவ்வாய்க்கிழமை பகலில் சாம்பார் சாதம் மாணவர் களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவு உண்ட மாணவர்களில் 10 பேருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10  பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் நல முடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரி வித்தன.

கீழ்மிடாலம் கடற்கரையில் இறந்து  கரை ஒதுங்கிய 2 டன் ராட்சத புள்ளி சுறா

குழித்துறை, டிச. 10- குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வீசிய கரைமடி வலை யில் சிக்கி இறந்த நிலையில் 2 டன் எடை  கொண்ட ராட்சத புள்ளி சுறா கரை ஒதுங்கியது.  குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை  கிராமத்தை சேர்ந்த மீனவர்கள்  காலையில் கடலுக்கு சென்று கரைமடி வலை வீசி மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் வீசிய  வலையினுள் ராட்சத சுறா மீன் ஒன்று சிக்கி யது.  இதனைக் கண்ட மீனவர்கள் அந்த சுறாவை வெளியேற்றி விட முயன்று வலையை அறுத்துள்ளனர். இதனால் சுறா கட லுக்குள் சென்றிருக்கும் என நினைத்த மீன வர்கள் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர். சிறிது நேரத்தில் அந்த பகுதியில் சுறா மீன்  ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சுறா சுமார்  10 அடி நீளமூம் 2 டன் எடையும் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த சுறா இறந்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  களியல் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, கடற்கரை பகுதியில் ராட்சத சுறா மீன் கரை  ஒதுங்கி இருப்பது குறித்த தகவல் பரவியது.  அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பள்ளி மாணவ ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கடற்கரை பகுதிக்கு  வந்து சுறா மீனை பார்த்து செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர். வனத் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சுறா மீனை உடற்கூராய்வு செய்து, புதைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.