தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Dec 2025, 2:48 pm

10 சதவிகிதம் கூடுதல் மழை

சென்னை: தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 379.3 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி வரை 416.1 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இயல்பை விட 1 சத விகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டிச.12 வரை மிதமான மழை

சென்னை: தெற்கு கேரள கடலோரப் பகுதி கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரண மாக டிசம்பர் 7 முதல் 12ஆம் தேதி வரை தமி ழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது.

அன்புமணி மீது போலீசில் புகார்

சென்னை: தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து கட்சியை அபகரித்து உள்ளதால் குற்ற வியல் வழக்கு பதிய வேண்டுமென்று அன்பு மணி ராமதாஸ் மீது தில்லி போலீசில் ராம தாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ-வான ஜி.கே. மணி புகார் அளித்து உள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்யலாம்

திண்டுக்கல்: மகளிர் உரிமைத் தொகை கோரி 29 லட்சம் விண் ணப்பங்கள் வந்துள்ள தாகவும், தகுதி இருந்தும் இம்மாதம் 12-ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் கோட்டாட்சி யரிடம் மேல்முறையீடு செய்யலாம் என உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச் சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கிளை அலுவலகமானது அதிமுக!

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக தற்போது பாஜக வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போது அண்ணாவும் இல்லை, முன் னேற்றமும் இல்லை. பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார். அதிமுகவை அமித் ஷாகுத்தகை எடுத்து அவரது கண்ட்ரோ லில் வைத்துள்ளார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

டிச. 11 விசைத்தறி தொழிலாளர்கள் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 6 - தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளர் மாநில சம்மேளனக்குழு கூட்டம், திருப்பரங்குன்றம் கே.பி. ஜானகியம்மாள் நினைவரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆர். சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம். சந்திரன், சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் பி. முத்துசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடும்பங்களின் பிரதான வருவாய் ஆதாரம் விசைத்தறி தொழிலே ஆகும். கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த 19.11.2025 முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். 17 நாட்களாக வருமானமின்றி போராடி வரும் விசைத்தறி தொழிலாளர்களின் நிலைமை மிகக்கடுமையாக உள்ளது. எனவே, தொழிலாளர்கள் முன்வைத்த நியாய மான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு மற்றும் தொழிலாளர் துறை அவசர தலையீடு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றி அமலாக்கி வரும் ஒன்றிய அரசை கூட்டம் கடுமையாக கண்டித்தது. போராடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் கூலி உயர்வு வழங்கக்கோரியும் டிசம்பர் 11 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் விசைத்தறி தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கி ணைந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.