128 ஆவது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>128 ஆவது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு</strong></p>
<p>உதகை, பிப்.16- உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் நடைபெறவுள்ள 128 ஆவது மலர் கண்காட்சிக்காக, 10 லட்சம் மலர் நாற்று கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 128 ஆவது மலர் கண்காட்சி நடை பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பாத் திகள் அமைத்து, பல வண்ண மலர் செடி கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்கா மேரிகொல்டு, பிரன்ச் மேரிகோல்டு, லில்லியம்ஸ் மற்றும் டேலியா போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியை, தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் நவ நீதா முன்னிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திங்களன்று தொடங்கி வைத்தார். கடந்தாண்டு 7.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப் பட்டது. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற் றும் பல புதிய ரக ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா போன்ற 275 வகையான விதை கள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெ ரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அவைகள் விதைக் கப்பட்டு, தற்போது மலர் செடிகள் உற் பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல் வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்று கள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டு வருகின்றன. நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பணியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாப்பு செய் யப்படுகிறது. மேலும், எதிர்வரும் மலர் கண் காட்சியினையொட்டி மலர்க்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 50,000 வண்ண மலர் தொட்டிச்செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந் தாண்டு இப்பூங்காவிற்கு 22.28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிந்த னர். இந்தாண்டு 25 லட்சம் சுற்றுலாப் பய ணிகள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்நிகழ்வில், துணை இயக்குநர் (பொ) பபீதா, உதவி இயக்குநர் ஜெயந்தி, பைசல், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
