தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 Feb 2026, 3:51 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திட்டக்குடி அருகே விபத்து:   3 மாணவர்கள் பலி

கடலூர், பிப்.1 - திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணையின் முடிவில் தெரிய  வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பழனி முருகன் கோவிலுக்கு   ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் வருகை

சென்னை, பிப்.1 - பழனி முருகன் கோவிலுக்கு ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள் ளார்.  கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மின் தூக்கி வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார். சுவாமிமலை கோவில் லிப்ட் வசதி பிப்ரவரி மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர், படை வீடுகளான திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சிறுவாபுரி, வடபழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்துள்ளனர். மங்களகிரியில் 8.6 கிலோ கொண்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தேர் விழா  நடைபெற்றது. மருதமலை மின் தூக்கி இரண்டு தளங்களைக் கொண்டது, ஒரே முறையாக 40 பேர் பயணிக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. கட்டணம் 30 ரூபாய், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சலுகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கும் பட்ஜெட்

ஒன்றிய பாஜக அரசின் 2026-27  நிதியாண்டுக்கான பட்ஜெட், நாட்டின் முதுகெலும்பான வேளா ண்மைத் துறையைப் பாதுகாப்பதற்கான எவ்வித புதிய திட்டங்களும் இல்லாத, விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகம் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் தொடரும் தற்கொலைகளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், விவ சாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி களைத் தீர்க்க இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. எம்.எஸ்.சுவாமி நாதன் குழுவின் பரிந்துரைப்படி, விளை பொருட்களுக்கு C2+50 சதவீத அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த  பாஜக 12 ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இதன் விளை வாகவே, பாஜக ஆட்சிக் காலத்தில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 48 ஆயி ரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். மானியக் குறைப்பும் விவசாயிகளின் ஏமாற்றமும் இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக, உர மானியம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து மானியங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாதது கவலை யளிக்கிறது. ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்ற சொற்பத் தொகை யை உயர்த்தி வழங்குவார்கள் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த னர். ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயி களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. புறக்கணிக்கப்பட்ட பாசனத் திட்டங்கள் மற்றும் கடன்தள்ளுபடி நாடு முழுவதும் நீர் பாசனக் கட்ட மைப்பை மேம்படுத்தவோ, புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கவோ இந்த பட்ஜெட்டில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதேபோல, கடும் வேளாண் நெருக்கடியில் சிக்கி யுள்ள விவசாயிகளை மீட்க, அவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ஒரு முறை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை குறித்து நிதி யமைச்சர் மௌனம் சாதிப்பது விவ சாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். துரோகத்தின் வெளிப்பாடு ஒட்டுமொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை வேளாண்மையைப் பாதுகாப்பதற்கான நிதி ஒதுக்கீடோ, புதிய திட்டங்களோ இல்லாத ஒன்றாகவே உள்ளது. இது ஒன்றிய பாஜக அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகளுக்குச் செய்து வரும் துரோகத்தின் வெளிப்பாடே ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.