தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் பசு மற்றும் கன்றுகளை பலியிடத் தடையா? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது! அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

29 May 2026, 9:52 pm
தமிழகத்தில் பசு மற்றும் கன்றுகளை பலியிடத் தடையா? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது! அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் பசு மற்றும் கன்றுகளை பலியிடத் தடையா? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது! அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, மே 29 - பக்ரீத் நாள் மட்டுமல்லாமல், எந்த வொரு நாளிலும் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நியாயமற்றது, எனவும், இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆட்சேபகரமான - உள்நோக்க கொண்டதான தீர்ப்பு! சென்னை உயர்நீதிமன்ற மாண்பு மிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ பசு மற்றும் கன்றுகளைப் பலியிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

பாரா 16-இல் தன்னுடைய வாதங்களை குறிப்பிட்டு, ‘மேலே உள்ள விதிமுறைகளையெல்லாம் கணக்கில் கொண்டால் அனுமதி பெற்றுள்ள இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் பலியிடக் கூடாது என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

ஆனால், அது தான் சட்டம் என்று அவர்கள் கருதும்பட்சத்தில் அனைத்து விலங்குகளையும் பலியிடுவதற்கு தடை விதித்திருக்கக் கூடும்.

ஆனால், பசு மற்றும் கன்றுகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும், ‘பக்ரீத்’ என்கிற பண்டிகையை குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் ஆட்சேப கரமானதும், உள்நோக்கம் கொண்டது மாகும்.

‘பக்ரீத்’திற்கு முதல் நாளில் வந்திருப்பது பொருத்தமற்றது! ஆடு, மாடு, கோழிகளை நேர்த்திக் கடன் செய்யும் பழக்கம் காலங்கால மாக இருந்து வருகிறது.

உணவுக்காக வும் மாடுகளையும் கன்றுகளையும் பலி யிடுகிற வழக்கமும் இருக்கவே செய் கிறது.

இதனை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுவது, ஒருபகுதி மக்களின் உணவுப் பழக்கத்திலும், வழிபாட்டு முறைகளிலும் தலையிடு வதாகும்.

கடந்த காலத்திலும் மத துவேஷத் தோடு இத்தகைய கோரிக்கைகள் வந்தபோதெல்லாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்போரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் ‘பக்ரீத்’ பண்டிகைக்கு முதல் தினம் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பது பொருத்தமற்றதாகும்.

எனவே, காலதாமதமின்றி மேல் முறையீடு செய்து உரிய நியாயத்தை யும், மக்களின் உணவு உரிமையையும் நிலைநாட்டிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.