மதுரையில் நீராதாரமின்றி வருவதால் சுருங்கும் விவசாயப் பரப்பளவு
9 Aug 2026, 12:21 am

மதுரையில் நீராதாரமின்றி வருவதால் சுருங்கும் விவசாயப் பரப்பளவு

மதுரை, ஆக 8-நிலத்தடி நீர்மட்டம் தொடர்ச்சியாகக் குறைந்து வருவதாலும், மாவட்டத்திலுள்ள பாசனக் குளங்களில் பாதியளவுக்கு மேல் வற்றிப் போய்விட்டதாலும், மதுரையின் பல்வேறு பகுதி விவசாயிகளும் சாகுபடிப் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

நீராதாரம் அதலபாதாளத்தில்இதுதொடர்பான நீர் வளத்துறையின் குளங்களின் இருப்பு நிலைஅறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 210 பாசனக் குளங்களில் 137 குளங்கள் முற்றிலும் வறண்டு போயுள்ளன. 76% முதல் 99% வரை நீர் இருப்பு உள்ள குளங்கள் வெறும் 3 மட்டுமே உள்ளன ; 69 குளங்கள் 1% முதல் 25% வரை நீர்இருப்பைக் கொண்டுள்ளன; ஒரே ஒரு மட்டுமே 26% முதல் 50% வரை நீர் கொண்டுள்ளது. மேற்பரப்பு நீர்வற்றியிருப்பது நிலத்தடி நீர் மறுஊட்டத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளதால், விவசாயிகள் முழுமையாக

நம்பகத்தன்மையற்ற மழையையே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அறிக்கையில்அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளின் இன்னல்கள்மாவட்டம் முழுவதும் பாசனக் கிணறுகளை நம்பி சாகுபடியைத் தொடங்கிய பல விவசாயிகளும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். “ஒருமுறை பாசனம்செய்த பிறகு கிணறு ஊறும் வரை பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பல கிணறுகள் படிப்படியாக வறண்டு வருகின்றன” என்று வாடிப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிஎன்.செந்தில்குமார் கவலை தெரிவித்தார்.

அதே போல, உசிலம்பட்டி தாலுகாகாய்கறி விவசாயி எம்.மருதுபாண்டியன் கூறுகையில்,”என்னிடம் உள்ள குறைந்த தண்ணீரை வைத்து இருக்கும் பயிர்களைப் பாதுகாக்க, காய்கறிச்சாகுபடியை கிட்டத்தட்ட 50% வரை குறைத்துவிட்டேன்” என சோகத்துடன் கூறினார். பாசனக் குளங்களுக்கு உயிர்கொடுத்து, தங்களது சாகுபடி சீசன் மேலும் இழப்பைச் சந்திக்காமல் இருக்க வரவிருக்கும் வாரங்களில் சரியான நேரத்தில் மழை பெய்யும் என்றஎதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.