முந்தய பக்கம்

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

26 Sept 2026, 1:49 am
புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப்.25-ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட கோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் விகிதத்தை அமல்படுத்திட கோரி அகில இந்திய அளவில் நவம்பர் 20ஆம் தேதி நாடு தழுவி அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வெள்ளிக்கிழமை மதிய இடைவேளையில் இப்போராட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தலைவர் சையத் அபுபக்கர், எஸ்என்இஏ சங்க தலைவர் பெர்லின்ஐசக், ஏஐபிஎஸ் என்எல்இஏ சங்க தலைவர் சரவணன் ஆகி

யோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய அரசை வலி யுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram