தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம் பிரச்சாரக் களத்தில் தொடரும் எதிர்ப்பு! மக்களின் கேள்விக்கு பதிலளிக்க திணறும் அமைச்சர்கள்

27 Sept 2026, 2:12 am
தாராபுரம் பிரச்சாரக் களத்தில் தொடரும் எதிர்ப்பு! மக்களின் கேள்விக்கு பதிலளிக்க திணறும் அமைச்சர்கள்

தாராபுரம் பிரச்சாரக் களத்தில் தொடரும் எதிர்ப்பு! மக்களின் கேள்விக்கு பதிலளிக்க திணறும் அமைச்சர்கள்

தாராபுரம், செப்.26–தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் செல்லும் பல்வேறுபகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்.6 ஆம் தேதி நடைபெற உள்ள தாராபுரம் இடைத்தேர்தலில், ஆளும் கட்சி சார்பில் மீண்டும் சத்தியபாமா களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில்இணைந்ததைத் தொடர்ந்து தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதே தொகுதியில் மீண்டும் வாக்கு கேட்டு வரும் நிலையில், சத்தியபாமாவின் பிரச்சாரத்திற்கு பல்வேறு இடங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரியகுமாரபாளையம் பகுதியில் பிரச்சாரத்தின்போது பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டுதிரும்பினார்.

அதேபோல் குண்டடம் மேற்கு ஒன்றியப் பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பின்போது எதிர்ப்பு ஏற்பட்டதால் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யாமல், உடல்நிலை சரியில்லை என்று

மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு செல்கிறார்கள்.

அமைச்சர்கள் பிரச்சாரத்திலும் எதிர்ப்புவேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளிலும் பொதுமக்களின் கேள்விகளும் எதிர்ப்பும் தொடர்வதாக தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர், பாசன நீர், விவசாயிகளின் வாழ்வாதாரம், விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டு வருவதை மக்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதனால், அதிகார பலத்தையும் அமைச்சர்களின் படையையும் களமிறக்கியும் மக்களின் அதிருப்தியை சமாளிக்க வேண்டிய நிலை ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மகேந்திரன் விலகல் – மேலும் ஒரு அதிர்ச்சிஇச்சூழலில், அதிமுகவை சேர்ந்த மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் வெள்ளியன்று இணைந்திருப்பது தாராபுரம் சுற்றுவட்டார அரசியலில் கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரன் ஆளும் கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்திருப்பது அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க செய்துள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் நடைபெறும் கட்சி மாறுதல்கள், மக்களின் தீர்ப்பை மதிப்பதா? என்ற அடிப்படை ஜனநாயக கேள்வியை எழுப்புகின்றன.

தாராபுரம் தொகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் தேர்தலை எதிர்கொள்கின்றனர். பிரச்சார வாகனங்களும், அமைச்சர்களின் வருகையும், அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளும் பொதுமக்களின் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை வைத்து வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தாராபுரம் இடைத்தேர்தல் – பதவிக்காக கட்சி மாறும் அரசியலுக்கு மக்கள் என்ன பதில் அளிக்கப்போகிறார்கள் என்பதற்கான முக்கியமான ஜனநாயக களமாக மாறியுள்ளது.(ந,நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.