தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் 4 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

yesterday
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் 4 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் 4 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை, நவ. 12 –2027 ஜனவரி 1-ஐ தகுதி நாளாகக் கொண்டு, தமிழகத்தில் 2027 ஜனவரி 4 வரை சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் (SSR) பணிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலைத் தமிழகத் தலைமைத் தேர்தல்அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை (நவ. 12) வெளியிட்டார்.

5 கோடியே 77 லட்சம் வாக்காளர்கள்

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், ஆண்கள் 2 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 992 பேர், பெண்கள் 2 கோடியே 95 லட்சத்து 34 ஆயிரத்து 734 பேர்,மூன்றாம் பாலினத்தவர் 7 ஆயிரத்து 892 பேர் எனத் தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 618 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 39 ஆயிரத்து 301 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில்5 லட்சத்து 29 ஆயிரத்து 528 வாக்கா ளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை

திருவள்ளூர் – 32,39,301; சென்னை – 29,14,908; சேலம் – 27,95,315; கோயம்புத்தூர் – 27,68,820; மதுரை – 25,13,711; செங்கல்பட்டு – 23,26,822; திருச்சிராப்பள்ளி – 21,61,238; கடலூர் – 20,49,811; திருப்பூர் – 20,01,436;தஞ்சாவூர் – 19,80,334; திருவண்ணாமலை – 19,47,156; ஈரோடு – 17,69,770; திண்டுக்கல் – 17,01,894; விழுப்புரம் – 16,08,995; கிருஷ்ணகிரி – 15,82,153; கன்னியாகுமரி – 15,26,871; விருதுநகர் – 15,19,601; தூத்துக்குடி – 13,95,495; நாமக்கல் – 13,29,376; புதுக்கோட்டை – 13,18,948; தென்காசி – 12,80,475; திருநெல்வேலி – 12,74,966; தருமபுரி – 12,59,510; காஞ்சிபுரம் – 12,21,180; வேலூர் – 11,59,481;இராமநாதபுரம் – 11,33,535; கள்ளக்குறிச்சி – 11,30,530; சிவகங்கை – 11,26,500; தேனி – 10,46,972; திருவாரூர் – 9,95,279; ராணிப்பேட்டை – 9,58,271; திருப்பத்தூர் – 9,28,853; கரூர் – 8,56,198; மயிலாடுதுறை – 7,40,963; பெரம்பலூர் – 5,62,134; நீலகிரி – 5,54,840; நாகப்பட்டினம் – 5,35,448; அரியலூர் – 5,29,528.

எஸ்ஐஆருக்கு முந்தைய நிலைமை

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு, 2026 ஏப்ரல் மாத நிலவரப்படி 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர்

பெண் வாக்காளர்கள், 7,728 மாற்றுப்பாலினத்தவர்கள் என தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வரைவு வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.

டிச. 11 வரை பெயர் சேர்க்க - நீக்க விண்ணப்பிக்கலாம்!

இந்த வரைவுப் பட்டியலின் அடிப்படையில், வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களைச் சரிபார்த்து, டிசம்பர் 11-ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்காக விடுமுறை நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுடன், பெறப்படும் விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்பட்டு, ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.https//voterportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET கைப்பேசிச் செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள்2027 ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், பட்டியலில் இதுவரை பெயர் இல்லாதவர்களும் படிவம் 6-ஐப் பயன்படுத்திப் பெயர் சேர்க்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் படிவம் 6A மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம். தொகுதி மாறியவர்கள், ஒரே தொகுதிக்குள் இடம் மாறியவர்கள், விவரத் திருத்தம் தேவைப்படுவோர், அடையாள அட்டை தொலைந்தவர்கள் ஆகியோர் படிவம் 8-ஐப் பயன்படுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.