முந்தய பக்கம்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து? விரைவில் அறிவிப்பு!

24 Sept 2026, 9:58 pm
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து? விரைவில் அறிவிப்பு!

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து?

விரைவில் அறிவிப்பு!

சென்னை, செப். 24 -சென்னை பட்டினப்பாக்க த்தில் வீட்டு வசதி, வருவாய் மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 25.5 ஏக்கர் நிலத்தில், ரூ. 1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் 8 அன்று அரசாணை வெளியிட்டிருந்தது.இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிமீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்; சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தின. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளநிலையில், அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை மாவட்ட மீன வர்கள் செப்டம்பர் 29 அன்று கண்டனஆர்ப்பாட்டம் அறி வித்துள்ளனர்.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குவெளியிடப்பட்ட அரசா ணையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாகப் பொதுத்துறை செயலாளருக்கு அவர்அறிவுறுத்தல் வழங்கியுள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.புதிய தலைமைச் செயலகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் குறித்த விவரத்துடன் புதிய அரசாணை வெளியிட அவர் உத்தர விட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும்கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram