தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆந்திராவில் கரையைக் கடக்கும் ‘முரசு’ புயல் சென்னை, திருவள்ளூரில் கனமழை!

2 Nov 2026, 11:00 pm
ஆந்திராவில் கரையைக் கடக்கும் ‘முரசு’ புயல் சென்னை, திருவள்ளூரில் கனமழை!

ஆந்திராவில் கரையைக் கடக்கும் ‘முரசு’ புயல் சென்னை, திருவள்ளூரில் கனமழை!

சென்னை, நவ. 2 -வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல், திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு 11.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை (நவ. 3) அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திரக் கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

புயல் தமிழகத்தை நேரடியாகத் தாக்காவிட்டாலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக, வடசென்னையின் எண்ணூர், ராயபுரம், திருவொற்றியூர், பாரிமுனை, மாதவரம், பெரம்பூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

11 விமானங்கள் ரத்து

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்ததால், திங்களன்று சென்னை,திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மோசமான வானிலை யால் சென்னை விமான நிலையத்தில் விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, திருச்சி வழித்தடங்கள்உள்பட 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடமேற்கே நகரும் புயல், நெல்லூர்-நரசாபூர் இடையே ஓங்கோலுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ளவர்கள் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் என்றும் காரைக்கால் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.