தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக; சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்துக! தேர்தல் ஆணையம் முன்பு இடதுசாரிகள் ஆவேச ஆர்ப்பாட்டம் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் கைது

29 Sept 2026, 9:52 pm
தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக; சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்துக!  தேர்தல் ஆணையம் முன்பு இடதுசாரிகள் ஆவேச ஆர்ப்பாட்டம் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் கைது

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக; சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்துக! தேர்தல் ஆணையம் முன்பு இடதுசாரிகள் ஆவேச ஆர்ப்பாட்டம்

எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் கைது

புதுதில்லி, செப். 29 –இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத் தலைமையகமான நிர்வாசன் சதன் முன்பு கண்டனப் பேரணி மற்றும் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணைய அலுவலகத்தின் நுழைவாயிலை நோக்கிச் செல்ல முயன்ற இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களைத் தில்லி காவல்துறை மிருகத்தனமான பலத்தைப் பயன்படுத்தி அராஜகமாகக் கைது செய்தது. அமைதியான முறையில் போராடியவர்களை இழுத்துச் சென்றும், பெண் போராட்டக்காரர்களை ஆண் காவலர்கள் தகாத முறையில் கையாண்டும் கைது செய்து போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இடதுசாரிகளின் ஒரு வார கால நாடு தழுவிய போராட்ட அறைகூவலின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முக்கிய கோரிக்கைகளும் கண்டனமும்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்; நீக்கப்பட்ட உண்மையான வாக்காளர்கள் அனைவரையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முழங்கப்பட்டன. மேலும், தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த 2023 ஆம் ஆண்டுச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறையைக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.

தலைவர்கள் பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பி.வி. ராகவலு, ஆர். அருண் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளர் தினேஷ் வர்ஷ்னே, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுசேதா தே, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜீவ் டிம்ரி, பார்வர்டு பிளாக் தில்லி மாநிலச் செயலாளர் தர்மேந்திர வர்மா, சி.ஜி.பி.ஐ (CGPI) தலைவர் பிர்ஜு நாயக் உள்ளிட்ட பலர் தலைமை தாங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.