வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’ பயிற்சி மையம் திறப்பு
3 Mar 2026, 3:38 pm
<p><strong>வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’ பயிற்சி மையம் திறப்பு</strong></p>
<p>இராமநாதபுரம், மார்ச் 3- தமிழ்நாடு துணை முதலமைச்சர் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘திறனகம்’ பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொழில் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு அவர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
