‘பயம் காரணமாகவே நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வரவில்லை’
10 Feb 2026, 4:50 pm
<p><strong>‘பயம் காரணமாகவே நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வரவில்லை’</strong></p>
<p>மக்களவைக்கு வராமல் பிரதமர் மோடி இருந்ததற்கு, எங்களின் அச்சுறுத்தல் காரணம் அல்ல. எதிர்க்கட்சியை எதிர் கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. அந்த பயம் காரண மாகவே மோடி நாடா ளுமன்றத்திற்கு வர வில்லை என்று மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் பெண் எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர். பிரியங்கா காந்தி, ஜோதிமணி உள்பட காங்கிரஸ் பெண் எம்.பி.,க்கள் எழுதிய அக்கடிதத்தில், “ஆளும் கட்சி வற்புறுத்த லின் பேரில், நீங்கள் எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள் மீது பொய்யான, அடிப் படை ஆதாரமற்ற மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது துர திருஷ்டமானது. சுய அதிகாரத்துடன் நடந்து கொள்ளாமல், அரசு அறிவு றுத்தல்கள்படி நீங்கள் செயல்படுகி றீர்கள். 8 எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு நீதி கேட்டு நாங்கள் உங்களை சந்தித்த போது, தவறு ஏற்பட்டதை ஒப்புக் கொண்டு மாலை 4 மணிக்கு சந்திக்கும் படி எங்களிடம் கூறினீர்கள். அதன் பின்னர், இந்த விவகாரம் குறித்து அரசு பதிலுக்காக காத்திருப்பதாகத் தெரி வித்தீர்கள். இது சபாநாயகரின் அதிகா ரத்தின் மீது பல கேள்விகளை எழுப்பு கிறது. அச்சமே காரணம் ஆளுங்கட்சியின் நெருக்கடிக்கு மத்தி யில் நீங்கள் பணியாற்றுவது தெளிவாகி றது. நாங்கள் பிரதமரை முற்றுகையிட முயன்றதாகக் குற்றம்சாட்டுவது, எங்கள் கவுரவம் மற்றும் நம்பகத்தன்மை மீதான தாக்குதல். பிரதமர் மோடி மக்கள வைக்கு வராமல் இருந்ததற்கு, எங்களின் அச்சுறுத்தல் காரணம் அல்ல. எதிர்க்கட்சி யை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. இந்த அச்சமே அவர் அவைக்கு வராமல் இருந்ததற்கு காரணம். மக்களவையின் பாதுகாவலர் என்ற முறையில் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல் பட்டு, சபாநாயகர் பதவியின் மாண்பை காப்பீர்கள் என்று நம்புகிறோம்” என கடிதத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.</p>
