‘அரசிலமைப்பு சட்டத்தையே சிதைக்கும் மோடி அரசு’ பாஜகவினரை விரட்டியடித்த விசிக-வினர்
26 Nov 2025, 4:29 pm
<p><strong>‘அரசிலமைப்பு சட்டத்தையே சிதைக்கும் மோடி அரசு’ பாஜகவினரை விரட்டியடித்த விசிக-வினர்</strong></p>
<p>தருமபுரி, நவ.26- அரசியலமைப்பு சட்ட நாளையொட்டி, அரூரிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்க சென்ற பாஜக-வினர் விரட்டியடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இந்திய அரசியல மைப்பு சட்டம் உரு வாக்கப்பட்ட நவ.26 ஆம் தேதி, நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்று கடைபிடிக்கப்பட்டு, சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதன்பின் பாஜக நகரத் தலைவர் ரூபன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, ‘அரசியலமைப்பு சட்டத்தை மோடி அரசு சிதைப்பதாகவும், இந்திய அரசிலமைப்பு சட்டத்தை குழிதோண்டி புதைப்பதாகவும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க உங்களுக்கு தகுதியில்லை’ எனக்கூறி பாஜகவினரை மாலை அணிவிக்க விசிக-வினர் எதிர்ப்பு தெரிவித்து விரட்டினர். இதனையடுத்து அரூர் காவல்நிலைய போலீசார் பாஜக-வினரிடம் சமாதானம் செய்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
