தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமையலறையில் புகுந்து ‘பொருளாதார தாக்குதல்’! ஒன்றிய பாஜக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

9 Mar 2026, 4:24 pm
சமையலறையில் புகுந்து ‘பொருளாதார தாக்குதல்’! ஒன்றிய பாஜக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு
<p><strong>சமையலறையில் புகுந்து &lsquo;பொருளாதார தாக்குதல்&rsquo;! ஒன்றிய பாஜக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு</strong></p> <p>&nbsp;&ndash; கார்த்திக் &ndash; கோவை, மார்ச் 9- சர்வதேச அரசியல் சூழலை சாக்குப்போக்காக கூறி, சாமானிய மக்களின் சமையலறையில் மீண்டும் ஒரு பொருளாதார தாக்கு தலை தொடுத்துள்ளது ஒன்றிய பாஜக &nbsp;அரசு. வீட்டு உபயோக சிலிண்டர் விலை &nbsp;மீண்டும் 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள தால், சாமானிய இல்லத்தரசிகள் கடும் &nbsp;அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள் ளனர். ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தை காட்டி, கச்சா எண் ணெய் விலையை காரணம் காட்டி &nbsp;இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்க ளின் லாபத்திற்காகவே மக்களின் தலை யில் இந்தச் சுமை ஏற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். விலை உயர்வை அறி வித்தது மட்டுமன்றி, 21 நாட்கள் இடை வெளி இருந்தால்தான் அடுத்த சிலிண் டர் என &lsquo;கட்டுப்பாடு&rsquo; என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது ஒன்றிய அரசு. இந்த விலை உயர்வு குறித்து &nbsp;கோவை பகுதியைச் சேர்ந்த இல்லத் தரசிகள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி &nbsp;என்பவர் கூறுகையில், &ldquo;ஏற்கனவே அத் தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. இப் போது ஒரே அடியாக 60 ரூபாயை உயர்த்தியிருக்கிறார்கள். எங்கேயோ நடக்கும் போரை காரணம் காட்டி எங்க ளிடம் பணத்தைப் பறிப்பது எந்த வகை யிலும் நியாயம் இல்லை. ஏழை, நடுத்தர &nbsp;மக்கள் எப்படி வாழ முடியும்? அடுப்பு &nbsp;எரிவதை விட எங்கள் வயிறுதான் கேஸ் &nbsp;சிலிண்டர் விலை உயர்வால் எரிகிறது. பாஜக அரசுக்கு மக்கள் நலனில் துளிக் கூட அக்கறை இல்லை என்பது மீண்டும் &nbsp;நிரூபணமாகியுள்ளது என்றார். இதேபோல உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா கூறுகையில், &ldquo;21 &nbsp;நாட்கள் இடைவெளி இருந்தால்தான் சிலிண்டர் தருவோம் என்பது மக்களை பதுக்கல் பேர்வழிகளாக சித் தரிக்கும் செயல். சிலிண்டர் தட்டுப்பாடு வரும் என்று வதந்தியை பரப்பி விட்டு, இப்போது விலையையும் ஏற்றி &nbsp;எங்களை வதைக்கிறார்கள். தேர்த லுக்கு ஒரு முகம், தேர்தல் முடிந்த &nbsp;பின் ஒரு முகம் என மக்களை ஏமாற் றுவதே பாஜக அரசின் வாடிக்கையாகி விட்டது. இந்த விலை உயர்வு சாதாரண குடும்பங்களின் பட்ஜெட்டை அடி யோடு சிதைத்துவிட்டது என வேதனை யோடு குறிப்பிட்டார். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், மானிய விலையில் சிலிண்டர் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் &nbsp;கோரிக்கைகள் பரவலாக எழுந்துள் ளன. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங் கும் மோடி அரசு, சாமானியப் பெண்க ளின் சமையலறைப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.