மைதானத்திலும் விளையாடும் ‘சாதி ’
11 Jan 2026, 2:59 pm
<p><strong>மைதானத்திலும் விளையாடும் ‘சாதி ’</strong></p>
<p>வெற்றியின் சுவடுகள் மட்டும் போதுமா? ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக் கும் போராட்டங்கள், மீறப்பட்ட தடை கள் தான் உண்மையான வரலாறு. இந்திய விளையாட்டு வரலாற்றின் பக்கங்களில், சில வெற்றிகள் வெறும் பதக்கங்களாக மட்டும் இல்லாமல், ஒரு முழு சமூகத்தின் எழுச்சியாக, அடக்கு முறைக்கு எதிரான கிளர்ச்சியாக நிற்கின்றன. முதல் முரண்பாடு கிரிக்கெட் மைதானம் இந்திய சமூகத்தின் துல்லியமான கண்ணாடி. 1928இல் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, ஐநூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். ஆனால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினரைக் கொண்ட பட்டியலின சமூகத்திலிருந்து வெறும் நான்கு வீரர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளனர். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, மறுக்கப்பட்ட கனவுகளின் கொடூர மான குறியீடுகள். நாட்டுப்பற்று கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அதி சயம் போன்றவர் பாலூ பல்வாங்கர். வெள்ளையர்கள் நடத்திய கிளப்பு களில் பந்துகளை எடுத்துப் போடும் பணியாளராக இருந்தவர். விளை யாட்டின் மீதான காதல் அவரை சிறந்த சுழல் பந்து வீச்சாளராக மாற்றியது. இங்கிலாந்துக்குச் சென்றபோது அங்கிருந்த கிளப்புகள் அவரை அழைத்தன. ஆனால் “எனது நாட்டு அணிக்காகவே விளையாடுவேன்” என்று மறுத்துவிட்டார். இந்திய அணியில் சேர்ந்தபோது, அவருக்கு தனியாக உணவு அருந்த இடம் ஒதுக்கப்பட்டது. அணியின் மற்ற வீரர்களுடன் சேர்ந்து உணவருந்த அனு மதி மறுக்கப்பட்டது. மைதானத்தில் அதே பந்துகளை எறிந்தவர், அதே வண்ணங்களை அணிந்தவர், ஆனால் சாப்பாட்டு மேசையில் தீண்டத்தகாத வர். நாட்டுக்காக ஒரு உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தவரை விலக்கியது இந்திய அணி. இது நம் தேசியவாதத்தின் போலித்தனத்தின் அம்பலப்படுத்தல். திறமை மட்டும் போதாது! மும்பை நகரில் சச்சின் தெண்டுல் கருடன் சேர்ந்து வளர்ந்த நண்பர் வினோத் காம்ப்ளி. இருவரும் 664 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த வர்கள். காம்ப்ளி தொடர்ந்து 2 முறை இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்தவர். ஆனால் இருவரின் பய ணங்களும் ஒரே மாதிரி அமைய வில்லை. சச்சின் கடவுளாக உயர்த்தப் பட்டார், காம்ப்ளி மறக்கப்பட்டார். ஒதுக்கித் தள்ளப்பட்டார். மைதானத் தில் அவர் எதிர்கொண்ட சாதி அடிப்ப டையிலான கேலி பேச்சுகள், ரசிகர் களின் வெறுப்பு வார்த்தைகள், வாய்ப்பு கள் மறுக்கப்பட்டது என்று பலவும் உண்டு. திறமை மட்டும் போதாது, பிறப்பும் முக்கியம் என்பதை நிரூபித்த வரலாறு அது. இரட்டை போராட்டம் நெல் வயல்களில் விளையாடிய ஹிமா தாஸ், செங்கல் சூளையில் உழைத்த சாந்தி சௌந்தரராஜன், ரிக்ஷா ஓட்டுநர் மகள் ஸ்வப்னா பர்மன், குத்துச்சண்டை வீராங்கனை துளசி ஹெலன், தடகள ராணி பி.டி. உஷா - இவர்கள் அனைவரும் இரட்டைப் போராட்டத்தின் வடுக்களைச் சுமப்ப வர்கள். பெண் என்பதால் ஒரு சவால், தலித் என்பதால் மற்றொரு சவால். துளசி ஹெலனின் வார்த்தைகள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன. “தலித்தாகப் பிறந்ததால், நான் அடித்தளத்திலேயே இருப்பேன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வேறு ஒரு வாழ்க்கையைக் கனவு காண்கிறேன்.” இந்தக் கனவு கூட குற்றமாகக் கருதப்படும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். சாந்தி சௌந்தரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, அவமானகர மான பாலின சரிபார்ப்புக்கு உள்ளாக்க ப்பட்டார். ஸ்வப்னா பர்மன் ஆறு விரல் களுடன் பிறந்து, சாதாரண செருப்பு டன் போட்டியிட்டு, வலியைத் தாங்கி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். இதுதான் உண்மை யான வெற்றி, இதுதான் நாம் கொண்டாட வேண்டிய வீரம். மாற்றத்தின் அவசியம் விளையாட்டில் பந்தை அடிக்கும் திறன், கோலை அடிக்கும் சக்தி, ஓடும் வேகம் - இவை சாதியைப் பொறுத்த வை அல்ல. அந்தத் திறமைகளை வெளிப் படுத்த கிடைக்கும் வாய்ப்புகள். ஆனால், சாதியைப் பொறுத்தே அமை கின்றன. இதுதான் நம் சமூகத்தின் சாபக்கேடு. கிராமப்புறங்களில் இருந்து இதுவரை 8 பேர் மட்டுமே தேசிய அளவி லான அணிகளுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தனிமனித வீரத்தை மட்டும் கொண்டாடி நிறுத்திவிட முடி யாது. அடிமட்ட மட்டத்தில் விளை யாட்டு வசதிகள், பயிற்சிக்கான ஆதரவு ஊக்கத்தொகை, திறமைகளை அடை யாளம் காணும் முறைகள் எல்லா சமூ கங்களுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். இது தானமல்ல, அவர் களது அடிப்படை உரிமை. நம்பிக்கையின் விதைகள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் “திற மையை குறைத்துவிடும்” என்று கூக் குரல் எழுப்புகிறார்கள். ஆனால், ஒரு நூற்றாண்டு காலமாக திறமையைத் தேர்வு செய்யும் முறையே சாதி சார்ந்த தாக இருந்திருக்கிறது என்பதை யார் மறுக்க முடியும்? இந்த வரலாற்றை நினைவுகூர்வது கடந்தகால சம்பவங்களை அசைபோடு வதற்காக அல்ல. இன்றும் நடக்கும் அநீதி களை அடையாளம் கண்டு, எதிர்கா லத்தை மாற்றுவதற்காகத்தான். விளையாட்டு மைதானம் ஒரு சமத்துவ பூமியாக இருக்க வேண்டும். -சி.ஸ்ரீராமுலு</p>
