tamilnadu

img

பள்ளிக் கல்வியை சீரழிக்கும் அரசாணை பாஜக அரசின் கொள்கை திணிக்கும் மறைமுக முயற்சி?

சென்னை:
பள்ளிக்கல்வியை சீரழிக்கும் அரசாணை 145ஐ திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் இந்தியக் கல்வியை மிக மோசமான வகையில் சீரழிக்கக்கூடியதாக உள்ளது. எனவே அந்த வரைவு அறிக்கையை திரும்பப்
பெறவேண்டுமென இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உள்ளிட்ட மக்கள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. வரைவு அறிக்கையின் மீது கருத்துக்களை கேட்ட மத்திய அரசு இதுவரை கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.

பாஜக அரசின் கொள்கையை திணிக்க மறைமுக முயற்சி 
இந்நிலையில், அரசுப் பள்ளிகளை சீரழிக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் அர சாணை 145ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி மாநிலத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மறைமுகமாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க முயற்சிக்கிறது. இது பல பள்ளிகளை இணைத்து பள்ளி வளாகங்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை யின் பரிந்துரையை அமல்படுத்தும் நடவடிக்கையின் துவக்கப்புள்ளியாகும்.தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் இல்லாத சூழலில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஆசிரியர்களை அனுப்பி, மாணவர்களுக்கு பாடம் நடத்திட வேண்டும். விளையாட்டு மைதானம், ஆய்வகம் போன்றவற்றை தொடக்கப் பள்ளி மாணவர்களும் பயன்ப டுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கண்காணிக்கும்போது மாணவர்களின் பாதுகாப்பு மேம்படும் என்பது உள்ளிட்டவற்றுக்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாணை தெரிவிக்கிறது. 

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்திடுக
தமிழகத்திலுள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை அவற் றோடு இணைப்பது நிலமையை மேலும் மேலும்சிக்கலானதாக மாற்றும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது உண்மை யிலேயே இந்த அரசிற்கு அக்கறை இருந்தால்,ஆசிரியர் நியமனம் தொடர்பாக தற்போதுள்ள நடைமுறையை மாற்றி குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்க வேண்டும். அதாவது தொடக்கப் பள்ளி களுக்கு 5 ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி களுக்கு 8 ஆசிரியர்கள் என்ற முறையைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் மட்டுமே தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த முடியும். மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளி களில் வகுப்பறைகள், பாதுகாப்புச் சுவர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் தான் மாண வர்களின் நலனை பாதுகாக்க முடியும். எனவே, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை 145ஐ உடனடியாக வாபஸ் பெறுவதுடன் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்தவேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. மேற்கண்டவாறு சங்கத்தின் மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார், செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

;