tamilnadu

img

மின்சார சட்ட மசோதாவை வாபஸ் பெறுக: தனியார்மயத்திற்கு எதிராக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆவேச போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1- மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம் திரும்ப பெற வேண்டும். மாநில மின் வாரியங்களை பிரிக்க கூடாது. பொதுத்துறையான மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு சிஐடியு, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொ.மு.ச பொறியாளர் கழகம், இன்ஜினீயர் சங்கம், எம்பிளாய் பெட ரேஷன், டிஎன்பிஇஓ, என்ஜினீயர் யூனி யன், ஐஎன்டியுசி, ஏஇஎஸ்யு, அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் அமைப்பு, என்எல்ஓ தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு அனைத்து பொறியாளர்கள், தொழி லாளர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தென்னூரில் உள்ள மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலு வலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய மைப்பு (சிஐடியு) மாநில துணைத்தலை வர் ரெங்கராஜன் தலைமை தாங்கி னார். தொழிற்சங்க நிர்வாகிகள் மலை யாண்டி, விக்ரமன், கண்ணன், சிவசெல் வம், பாலாஜி, செல்வராஜ், இருதய ராஜ், ராஜமாணிக்கம் நடராஜன், செல்வக்குமார், சந்தானம், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொழிலா ளர் ஐக்கிய சங்க கோட்டத் தலைவர் நெல்சன், தொமுச கோட்டச் செயலா ளர் அன்பழகன், சிஐடியு கோட்டத் தலை வர் தர்மலிங்கம் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலு வலகம் முன்பாக மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மின்சார சட்டத் திருத்த மசோதா வாபஸ் வாங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய  அரசை கண்டித்து (சிஐடியு) மின்வாரிய மாவட்ட செயலாளர் கு.நடராஜன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  அதே போல் அறந்தாங்கி உதவி இளமின்பொறியாளர் அலுவலகம் முன்பாக உதவி மின்பொறியாளர் சாக்கோ ஜீவா தலைமையில் மின் அலு வலர் அருணாசலம், பழ.முத்து, ஜெய் சங்கர், தர்மராஜ், ஜெகன், சுந்தரம், சபாபதி உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

;