tamilnadu

img

கற்றல் சூழல் குறித்த அறிக்கை குழுவில் இணைக்க வேண்டும்...

சென்னை:
மகிழ்ச்சியான கற்றல் சூழல் குறித்து விரிவான அறிக்கை அளித்திட பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் தங்கள் சங்கத்தையும் இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் செய்திக் குறிப்பு வருமாறு:     
சுகாதார பேரிடர் காரணமாக ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எதிர் கொள்ளும் சவால்களில் மிக முக்கியமானது குழந்தைகள் பராமரிப்பும் அவர்களின் கல்வியும்‌. கடந்த கல்வி ஆண்டில் ஏற்பட்ட சிக்கல்கள், அடுத்தக் கல்வி ஆண்டில் ஏற்பட இருக்கும் பாடவேளை இழப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு குழந் தைகளுக்கு உருவாக்கித் தர வேண்டிய மகிழ்ச்சியான கற்றல் சூழல் குறித்து விரிவான அறிக்கை அளித்திட  பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள் ளது தமிழ்நாடு அரசு.இக்குழுவில் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும், மூத்த கல்வியாளர்களையும் இணைத்துக் கொண்டு இக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு அதன் பின் அறிக்கை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

தற்போது,  அரசு குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விரிவாக் கப்பட்டக் குழுவில் ஆதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படிக்கும் தமிழ் நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. மாறாக மத்திய பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் சங்கத்தலைவர் இடம் பெற்றுள்ளார். மாணவர் கல்வி நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை சிறுமைப் படுத்தும் செயலாகவே இதனை பார்க்க வேண்டி உள்ளது. கற்றல் - கற்பித் தல் பணியில் மைய செயல்பாட்டில் உள்ள ஆசிரியர்களின் அனுபவத்தை கவ்வி ஆண்டு எதிர்கொள்ள உள்ள சிக்கல்களை சமாளிக்க பயன்படுத்தாமல், கொள்கை உருவாக்கத் தில் அவர்களுக்கு உரிய இடம் தராமல்  "நாங் கள் வகுத்துக் தருவதை நீங்கள் நிறைவேற்றினால் போதும்" என்ற முறையில் ஆசிரியர் நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல. 

பாட அளவு, கற்பித்தல் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல முடிவுகளை மேற்கொள்ள உள்ள இக்குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். மூத்த கல்வியாளர்களை இணைக்க வேண்டும். இக்குழு ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசிற்கு அறிக்கை அளித்திட வேண்டும். பள்ளிக் கல்வி அமைச்சர்,முதல் அமைச் கர் ஆகியோர் உடனடியாக இக்குழுவில் தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்தின் படி இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை குழுவில் இணைந்து மாணவர் நலனை முன்னிறுத்தி முடிவுகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த குழுவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தையும் இணைக்க கோரி மாநில அமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் கே.பி.ஒ.சுரேஷ். மாநில பொதுச் செயலாளர் ப.மனோகரன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

;