tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 4328 பேருக்கு கொரோனா பாதிப்பு...  மதுரையில் உயரும் தினசரி பாதிப்பு... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.  தொடக்கத்தில் மக்களை நெருக்கம் அதிகம் உள்ள சென்னை பகுதியில் மையம் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 66 பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. 3,053 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

மாவட்ட நிலவரம் 
தமிழக மாவட்டங்களில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 78 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று சென்னையில் 24 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1200-யை தாண்டியது. சென்னைக்கு அடுத்து மதுரையில் 464 பேரும், காஞ்சிபுரத்தில் 352 பேரும், திருவள்ளூரில் 337 பேரும், செங்கல்பட்டில் 219 பேரும், கன்னியாகுமரியில் 184 பேரும், விழுப்புரத்தில் 136 பேரும், தேனியில் 134 பேரும், வேலூரில் 129 பேரும், ராணிப்பேட்டையில் 126,தூத்துக்குடியில் 122 பேரும், நெல்லியில் 113 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

;