tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,864 பேருக்கு தொற்று... இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 97 பேர் பலி...  

சென்னை 
தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. நகரங்களில் மடமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கியதால் கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சமாக 6 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதனால் தமிழக மக்கள் கடந்த ஒருவாரமாக மிகவும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.  

இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று (வியாழன்) தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் (5,864 பேருக்கு) சுருண்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பலி எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 97 பேர் பலியாகியுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 5,295 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 1,78,178 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.இன்றைய கொரோனா பாதிப்பில் 53 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

;