world

img

ஜம்மு-காஷ்மீர்: குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து  

ஜம்மு-காஷ்மீரில் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.    

ஐம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் இன்று காலை(மார்ச் 1) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

காயமடைந்தவர்களை அருகிலிருந்த ஜிஎம்சி அனந்த்நாக் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அனந்த்நாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனைதொடர்ந்து விபத்து குறித்து அனந்த்நாக் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

;