world

img

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு

பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சட்டவிரோத விருந்துகளைத் தனது அலுவலகத்தில் நடத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் ஸ்டீவன்சன், "மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். ஆனால் பிரதமரோ, இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை" என்று குறிப்பிட்டார். பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், 54 கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதம் தேவை. இதுவரை 25க்கும் மேற்பட்டவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை, தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஜான்சனுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்று வில்லியம் ஹேக் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

;