world

img

71% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி....  சாதனை படைத்த சீனா...

பெய்ஜிங் 
3 மற்றும் 4-வது கொரோனா அலைகள தடுத்து நிறுத்த உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மும்மூரமாக செயல்படுத்தி வரும் நிலையில்,  சீனா தடுப்பூசி செல்லுவதில் புதிய வரலாறு படைத்துள்ளது. அச்சாதனை என்னவென்றால் தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 71% பேருக்கு 2-ஆம் தவணை தடுப்பூசி சாதனை செய்துள்ளது. 

செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி 2.16 பில்லியன் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80% பேருக்கு தடுப்பூசி வழங்க  இலக்கு ஒன்றையும் நிர்ணயித்து அதனை செயல்படுத்த சீன அரசு வியூகம் வகுத்துள்ளது.

;